கோவை வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “சர்வதேச நடன தினக் கொண்டாட்டம்” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நடன உலகில் தொலைநோக்குப் பார்வையாளரான ஜீன் ஜார்ஜல் நோர்வரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரிய, குழு நடனப் போட்டி, நாட்டுப்புற மற்றும், மேற்கத்திய நடன வடிவங்களான பரதநாட்டியம், கதக், பங்கரா, ஹிப் ஹாப் மற்றும் சமகால நடனங்கள் ஆகியவற்றை மாணவர்கள் உற்சாகமாய் அரங்கேற்றம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.