டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) துறை சார்பில் “சைபர்நெக்சஸ்” மாணவர் சங்கத் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு சென்னை என்டுடியோ குழும நிறுவனங்களின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் நவீன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தைத் தொடங்கி வைத்தார். துறைத்தலைவர் ராஜலட்சுமி தலைமையுரை வழங்கினார். உதவி பேராசிரியர் கோமதி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். சங்கத்தின் செயலாளர் 2025–2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
