இத்தனை நாட்களாக கோவை மாநகரை வாட்டியெடுத்த வெயில் இனி அப்படியே குறையும் என வானிலை ஆய்வாளர் சுஜய் கணித்துள்ளார்.
கோவை மாநகரில் தற்போது கோடை மழை சூழல் மெதுவாக தலைகாட்ட துவங்கி உள்ளது. சில இடங்களில் 3-4 நாட்களாக மாநகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைப்பொழிவு ஏற்படுகிறது. கோடையின் கொடூரம் தனிய துவங்கி உள்ளது.
இந்நிலையில் அடுத்து வரக்கூடிய நாட்கள் கோவை மாநகரில் எப்படி இருக்க வாய்ப்புள்ளது என சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர், கோவை மாநகரில் கடந்த வாரம் அதிகபட்சம் 37 ° செல்ஸியஸ் வரை வெப்பம் நிலவிய நிலையில் இந்த வாரம் 36 ° செல்ஸியஸ் வரை வெப்பம் நிலவும் எனவும் இதன் பின்னர் மாநகரில் வெப்பம் உயர பெரிய வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினார்.
இனி போக போக மாநகரில் வெப்பம் குறையும் என கூறிய அவர், இந்த வாரத்தில் கோவை மாநகரில் ஆங்காங்கே மிதமான மழைக்கும், சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

