கோவை மாநகரத்தில் இந்த வாரம் (10.8.26 முதல் 15.8.26 வரை) வெப்பம் 33° செல்ஸியஸ் முதல் 34° செல்ஸியஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. சென்ற வாரம் 33° செல்சியஸ் வரை வெப்ப நிலவிய நிலையில் இந்தவாரம் கூடுதலாக 1° செல்ஸியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

மழையை பொறுத்தவரை, கோவை மாநகரத்தில் ஆங்காங்கே இந்த வாரம் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தகவல் : சுஜய், கோவை வானிலை ஆய்வாளர்.