தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபை சார்பில் கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு நடைபெற்றது.

பாருங்கள் – நம்புங்கள் – உருவாக்குங்கள் என்ற மூன்று அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில்  நடைபெற்ற இம்மாநாட்டில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவுசார் மாநாடு நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர். நான்கு அறிவுசார் அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கான கண்காட்சியும் இடம்பெற்றது.

மேலும் இதுபற்றி ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் கூறுகையில் :-

இளைஞர்களிடம் திறமை, கல்வி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதிலும், வழக்கமான வேலைவாய்ப்புகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. வேலைவாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மனநிலைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் விட்டோ ஃ வைசியா சூப்பர் ஆப் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
BBAK scaled
மாநாட்டில் நடைபெற்ற விட்டோ செயலியின் அறிமுக நிகழ்வில் கே.ஜி.மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.