கோவை மாநகரில் வார்டு 26க்கு உட்பட்ட பகுதி ஒன்றில் நிறுவப்பட்டுள்ள  தண்ணீர் பைப் சில காரணங்களால் இன்று காலை உடைந்து தண்ணீர் பெருமளவு சாக்கடையில் கலந்தது.

இரும்பு பைப் உறுதியாக இருந்தாலும் தண்ணீரை பிடிக்கவும் நிறுத்தவும் பயன்படுத்தப்படும் ‘டாப்’ பலவீனாக இருந்ததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. தண்ணீர் இதுபோல துரதிஷ்ட வசமாக ‘லீக்’ கசிந்தால் அது நேரே சாக்கடையில் கலக்கும் படிதான் இந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
WEAKLEAK scaled

இது போல அருகில் உள்ள பிற இடங்களில் குடியிருப்புகளுக்கும், தெருக்களுக்கும் முன்னர் வைக்கப்பட்டுள்ள பைப்புகள் எப்படி உள்ளது என பார்த்தல் அவை பலவீனமாக தான் இருக்கின்றன என்பது தெரியவந்தது.

வார்டு 26ன் மட்டுமல்ல மாநகரில் இதுபோல எங்கெல்லாம் பொது மக்கள் நீர் பெற சாலைகள் ஓரம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளத,  குழாய்கள் வைக்கப்பட்டுள்ளதோ, அவற்றின் உறுதிதன்மையை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் ஆராய வேண்டும்.
WATERLEAKCOL scaled

சமீபத்தில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் (கலெக்டரிடம்) கோவை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆட்சியரிடம் பருவநிலை மாற்றம் பற்றியும் எல் நீனோ பற்றியும் கேள்வி எழுப்பினர்.

அது பற்றிய உரையாடலின் போது, மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு ஆட்சியர் எடுத்துரைத்தார். அவர் மாணவர்களிடம் “நீங்கள் உங்கள் பள்ளிக்கு நாளை திரும்பியதும் உங்கள் ஆசிரியர்களிடம் , நமது பள்ளியில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என கேளுங்கள். அதேபோல உங்கள் பெற்றோரிடமும் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு (போர்வெல்) எத்தனை அடியில் நீர் தருகிறது என கேளுங்கள்,” என கூறினார்.

மழைநீர் சேமிப்பு எத்தனை முக்கியம் என்பதை அவர் மாணவர்களுக்கு விளக்கினார். இப்படியிருக்க, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோகிக்கும் கட்டமைப்புகள் வலுவானதாக இல்லாமல் இருந்தால், மாணவர்கள் நாளை யாரை நோக்கி கேள்வி எழுப்புவார்கள்? யாரை அதற்கு காரணமாக கருதுவார்கள்?

கோவை மாநகரில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பல குழாய்கள் ‘லீக்’ ஆகின்றன. இது நடக்கிறதா இல்லையா என ஆய்வு செய்து பார்ப்பது அவசியம்.