உலகளாவிய உயர் கல்வித் துறையில் டாக்டர் ஜி விஸ்வநாதன் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பனை சிறப்பிக்கும் விதமாக கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சன்னி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதனையொட்டி,  கோவையைச் சேர்ந்த விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் (VITAA) இணைந்து பாராட்டு விழாவை  நடத்தினர்.

இந்நிகழ்வில், விஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் மற்றும் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்களாக கே.ஜி மருத்துவ குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவச்சலம், கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், பி.பி.ஜி. கல்விக் குழும தலைவர் தங்கவேலு, மகாலிங்கம் கம்பெனி குழும தலைமை இயக்குநர் சந்திரசேகர், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் சங்கத் தலைவர் ரங்கநாதன் மற்றும் கே.ஜி. மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.