கேரளத்திலிருந்து கோவைக்குள் வரும் வாகனங்களை எல்லையிலேயே வைத்து அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பொருட்களை எடுத்துவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த முழுவ விவரம் பின்வருமாறு :-

கேரளத்தின் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவலால் பாதிப்பு உறுதியாகி உள்ள சூழலை அடுத்து கோவை மாவட்ட எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் வாளையார், வேலந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
rainfallinkerl scaled
குறிப்பாக கோழிகள், பறவைகள் ஏற்றி வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என முழு விவரமும் சேகரிக்கப்படுகிறது.கோழி சம்பந்தமான எரு, இறைச்சி, முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை.

பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கால்நடை பராமரிப்புத்துறையின் கோவை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சித்ரா களத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.