தேசிய நாட்டு நலப்பணித் தினத்தை முன்னிட்டு, நிர்மலா மகளிர் கல்லூரியில், அலர்ட் என்.ஜி.ஓ அமைப்பின் சார்பில் விபத்துகள் நடக்கும் போது செய்ய வேண்டிய முதலுதவி, மயக்கம் ஏற்பட்டால் தர வேண்டிய முதலுதவி, சி பி ஆர், முதலிய அவசர தேவை குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அலர்ட் என்.ஜி.ஓ திட்ட மேலாளர் வெங்கடேசன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் அருள்சகோதரி குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர் அருள்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் தலைமையேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர் பங்கேற்றனர்