சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களின் சேர்க்கை, பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு உதவும் வகையில் எல்.எஸ் போக்கஸ் 4டி கெரியர் எஜுகேஷன் லிமிடெட் எப்ஏசிஇ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் சேகர், எப்.ஏ.சி.இ.,யின் சிஇஓ கார்த்திக் ராஜா, முதல்வர் ராஜ்குமார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொண்டனர்.
கல்வி கற்றல், தொழில் துறை தேவைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைத்து வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் மற்றும் வளங்களுடன் மாணவர்களை உருவாக்கும் நோக்கோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
