பொதுமக்களிடையே வாய் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் “மே டென்டல் கார்னிவல்” நிகழ்ச்சி இன்று முதல் 17 வரை நடைபெறுகிறது.
இதனை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக தலைமை செயல் அதிகாரி ராம்குமார், பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தீபானந்தன், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார் கலந்துகொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ராஜகோபால், மருத்துவ இயக்குனர் மற்றும் டாக்டர் அழகப்பன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பல் மருத்துவக் கண்காட்சி, வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, நிபுணர்களால் வழங்கப்படும் விழிப்புணர்வு சொற்பொழிவுகள், விளையாட்டு போட்டிகள் வாயிலாக பல் சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளக்கூடிய உற்சாக நிகழ்வுகள் இதில் இடம்பெறும்.