சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சார்பில், “வெற்றி என்பது அதிர்ஷ்டம் அல்ல” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக இம்ப்ரெஸ் ஐகியூ அகாடமி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலந்து கொண்டு பேசுகையில்: வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைப்பதல்ல. கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றின் பலனாகும்.

மாணவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, தங்களது திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் உயர்ந்த வெற்றியை அடைய முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிநாராயணசாமி, தலைவர் சுகுணா, சுகுணா அறக்கட்டளையின் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், செயலாளர் மற்றும் இயக்குநர் சேகர், கல்லூரி முதல்வர்  ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.