பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஆரோக்கியம் மற்றும் நலன் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கோவை உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நியமிக்கப்பட்ட அதிகாரி அனுராதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, “பாதுகாப்பான உணவு செயலாக்கத்தின் வழியாக ஆரோக்கிய வாழ்வு” என்ற தலைப்பில் பேசினார். கலப்பட உணவுகளை அடையாளம் காணும் செயல்முறையையும் விளக்கினார்.

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் உடன் இக்கல்லூரி ஒப்பந்தம் மேற்கொண்டது. நிகழ்வில் கல்லூரி செயலாளர் யசோதாதேவி, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
