சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர் பிரகலாதன் குமாரசாமி, ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதுடன், சென்னையில் நடைபெறவிருக்கின்ற மாநில அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மேல்நிலைப் பிரிவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் 12ம் வகுப்பு வணிகவியல் பிரிவு மாணவர் பிரகலாதன் குமாரசாமி முதலிடம் பெற்றார்.
9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீசர்வேஷ்வர் இரண்டாம் இடம் பெற்றார். இடைநிலைப் பிரிவில் 6ம் வகுப்பு மாணவர் சாய் சத்யதேவ் இரண்டாம் இடம் பெற்றார். திருக்குறள் தொடர்பான கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் 11ம் வகுப்பு வணிகவியல் பிரிவு மாணவி கிருத்திகா முதல் பரிசு பெற்றார்.
திருக்குறள் தொடர்பான ஓவியப் போட்டியில், மேல்நிலைப் பிரிவில் கிஷோர் புகழ் இரண்டாம் இடத்தையும், அறியவன் ஊக்கப் பரிசையும் பெற்றனர். இடைநிலைப் பிரிவில் மஹந்த் ராம் இரண்டாம் பரிசு பெற்றார்.
வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்குக் காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் கோவை மண்டல மேலாளர் சக்திவேல் வாழ்த்தினார். சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி 9வது முறையாக மாநில அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அத்துடன், பள்ளி மாணவ மாணவியர் ஆறு முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர்.
மாநில அளவில் சென்னையில் அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுப் பேச்சுப் போட்டியில் தொடர்ந்து 2வது ஆண்டாகக் கலந்துகொள்ளவிருக்கின்ற மாணவர் பிரகலாதன் குமாரசாமியைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப் புல முதன்மையர் ஷீலா கிரேஸ் பாராட்டினர்.
