டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கம்பா நிறுவனத்தின் ஒரு பிரிவான சாஸ் அவின்யா பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கல்லூரி செயலர் ராமசாமி, சாஸ் அவின்யா இயக்குநர் தாமோதரசாமி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2, 3 ஆம் ஆண்டு மாணவர்கள் நேரடி செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெறுவார்கள். செயற்கை நுண்ணறிவு சிறப்பு பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்ப திட்ட அனுபவங்கள், நிபுணர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கு, ஆராய்ச்சி நடவடிக்கையின் நேரடி பங்கேற்பு, புதிய தொழில்முறை வலையமைப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையம் நிறுவப்படும்.
முதல்வர் கோவிந்தசாமி கூறுகையில்: மாணவர்களுக்கு தொழில்துறை தொடர்பான திறன்கள், நடைமுறை அனுபவத்தை வழங்குவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார்.