கோவையில் வரும் ஜூலை 12 அன்று ஸ்டார்ஸ் நைட் அவுட் என்ற கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் சினிமா, இசைத்துறை பிரபலங்களை ஒரே மேடையில் இணைக்கும் ஸ்டார்ஸ் நைட் அவுட் எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கான்சர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் லோகோ வெளியிடும் நிகழ்வு அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி, பாடகி ரேஷ்மா ஷ்யாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் மற்றும் இன்புளுன்சர் சந்திப்பு நடந்தது. இதில் கீர்த்தி ஷெட்டி பேசுகையில்: கோவை தமிழ் தனக்கு மிகவும் பிடிக்கும். நேரடித் தமிழ் படங்களில் நடித்து வருகிறேன்.  அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவைத் தருவார்கள் என்று நம்புகிறேன் எனப் பேசினார்.

நிகழ்ச்சியில், தமன்னா, கீர்த்தி ஷெட்டி, ஓவியா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். ஹரிஷ் ராகவேந்திரா, ஹர்ஷவர்தன், சிவாங்கி கிரிஷ், ஐக்கி பெர்ரி உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இசை, நடன நிகழ்ச்சிகள், நேரடி பாடல்கள், டி.ஜே இசை தொகுப்புகள், நவீன ஒலி மற்றும் ஒளி தொழில்நுட்பத்துடன் கூடிய மேடை வடிவமைப்பு, என பல்வேறு சிறப்பம்சங்கள் கலை நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன. நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ.599ல் இருந்து துவங்குகிறது. டிக்கெட்டுகளை புக் மை ஷோ, டிக்கெட் பிரிக்ஸ் ஆகிய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.