சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர் 21 நிமிடங்களுக்கு 21 வகையான யோகாசனங்களை செய்து அனைவரையும் கவர்ந்தனர். வெள்ளை உடையில் மாணவ மாணவியர் ஒற்றுமையாக யோகாசனங்களை செய்தனர்.

நிகழ்விற்கு பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவ மாணவியருக்கு யோகா பயிற்சியாளர் ராபர்ட் சண்முகம் சிறப்பு பயிற்சி வழங்கினார்.