கோடை கால சீசனில் தமிழகத்தின் 2 முக்கிய நகரங்களான சென்னை, கோவை இடையே சிறப்பு ரயில் சேவை மே 13ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய வழித்தடத்தில் இயங்கும் இந்த கோடைகால சிறப்பு ரயில் சேவையை வரவேற்பதாக தொழில்துறை அமைப்பான கொங்கு குளோபல் போரம் அறிவித்துள்ளது.
சேவை விவரம் :-
சென்னை – போத்தனூர் ரயில் (வண்டி எண் 06023) மே மாதத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் – 13,15,20,22, 27, 29ம் தேதிகளில் இரவு 11.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும்.
போத்தனூர் – சென்னை ரயில் (வண்டி எண் 06024) வியாழன் மற்றும் ஞாயிறுகளில் – மே 14,17,21,24,28, 31ம் தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு போத்தனுரில் இருந்து புறப்படும்.
“கோடை விடுமுறை காலம் என்பதால் அதிகப்படியான பயணிகள் சென்னை – கோவை பயணிக்கின்றனர்.

Train 2 scaled

சிறப்பு ரயில் சேவைக்கான தேவை உள்ள சூழலில் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள இந்த சேவை பயணிகள் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். ரயில்கள் போத்தனூருடன், கோவை சந்திப்பிலும் நின்று செல்லும் என்பதால் நகருக்குள் எளிதாக பயணிகள் வரமுடியும். நகரில் இருந்து எளிதில் பிற இடங்களுக்கு செல்ல பொது போக்குவரத்து உள்ளது பயணங்களை எளிதாக்குகிறது,” என கொங்கு குளோபல் போரம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் போத்தனுர் சந்திப்பில் உள்ள பிளாட்பாம்ங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் கருத்து தெரிவுள்ளது கொங்கு குளோபல் போரம்