இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் ஸ்பைடர் 8 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக ஜோஹோ, சென்னை நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில்: தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வது மற்றும் சரியான மனப்பான்மையுடன் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 2,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் உருவாக்கிய மின்-கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சியாக வைக்கப்பட்டன.
ஸ்பைடர் நிகழ்வின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களால் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இவ்விதழில் மாணவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்ப ஆர்வம், துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் இடம்பெற்றுள்ளன.
நிகழ்வில் 43 கல்லூரிகளைச் சேர்ந்த 672 மாணவர்கள் பங்கேற்று பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகள், நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்தினர்.
