ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் புதிய திறன் ஆய்வகம் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோவின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக இந்திய வானியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்திக், சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் கண்ணபிரான் பங்கேற்றனர்.

மாணவர்களின் புதுமைத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் வோக்ஸ் வேவ், பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறக்கப்பட்டு, மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களுடன் நேரடி பாட்காஸ்ட் உரையாடலை நடத்தினர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முதன்மை செயல் அதிகாரி ராம்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளி முதல்வர் ஜெயந்தி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
