கோவை கணபதி பகுதியில் (அப்பாய் நாயுடு லே அவுட்-டில்) அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் திருக்கோவிலின் 47ம் ஆண்டு உற்சவ திருவிழா 12.5.2026 முதல் 24.5.2026 நடைபெறுகிறது.
12ம் தேதி கம்பம் நடும் நிகழ்வை தொடர்ந்து, 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இன்று (20.5.26) சக்தி கரகம் திருவீதி உலா மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெரும்திரளாக வீதிகளில் கூடி அம்மனை தரிசித்தனர்.
இதனை தொடர்ந்து அன்னதானம், மா விளக்கு பூஜை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை 21ம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்வை தொடர்ந்து 22ம் தேதி மறுபூஜை உடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

