இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பாக உலக பூமி தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து நிலையான காலநிலை நடவடிக்கை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

முதன்மை சிறப்பு விருந்தினராக சென்னையில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி சீனிவாசன் கலந்துகொண்டு பேசுகையில்: இன்றைய சூழ்நிலைகளில் கால நிலையின் மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கு நிலையான கழிவு மேலாண்மை மற்றும் புதுமையான நடைமுறைகளும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு குழுவின் முன்னாள் துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குழுவின் இயக்குனர் சல்குணா மற்றும் சுற்றுச்சூழல் ரோட்டரி தெற்காசிய உறுப்பினர் பொன் ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிலையான கழிவு மேலாண்மை, உயிரியல் பொறியியல் அமைப்புகளை மீட்டெடுத்தல், காலநிலை மாற்றம் மற்றும் பரிமாணங்கள் குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துக் கூறினர்.

கல்லூரி முதல்வர் ஜெயா பேசுகையில்: காலநிலை மாற்றத்தில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதன் மூலம் சாத்தியமாகும் என்று கூறினார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில்: இன்றைய சூழ்நிலைகளில் கால நிலைகளில் ஏற்படும் மாற்றத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவை இதில் உப்புகுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இரண்டாம் நாளில் வட்டப் பொருளாதாரம், கார்பன் கிரெடிட் முறைமை மற்றும் தொழில்துறை கழிவு மேலாண்மை குறித்த அமர்வுகள் நடைபெறவுள்ளன. நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்தரங்கிற்கு தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், துறைகளின் டீன்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.