தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் தங்கள் முகங்களில் “என் வாக்கு – என் உரிமை”, “100% வாக்குப்பதிவு”, “என் வாக்கு விற்கப்படாது”, “வாக்களிப்பது தேசிய பொறுப்பு” போன்ற விழிப்புணர்வு வாசகங்களை ஓவியமாக தீட்டி, கவனத்தை ஈர்த்தனர்.

கல்லூரி வளாகம், ஐ.டி. பூங்கா பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிறப்பு வேடங்கள் மற்றும் கலைநிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.