நிர்மலா மகளிர் கல்லூரியில், ‘சிறந்த பள்ளி தலைமையாசிரியர் விருது’ வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்துகொண்டு கல்வித் துறையில் சிறப்பாக செயல்பட்ட 25 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார். கல்லுரியில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சார்ந்த 960 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

