சக்தி தகவல் மேலாண்மை கல்லூரியின் பைனான்ஸ் க்ளப் மற்றும் இன்னோவேஷன் கவுன்சில் மூலம் பத்திர சந்தையின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கு நடந்தது. கல்லூரியின் இயக்குநர் ஷர்மிளா தலைமையுரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கோவை எடிபை எடுடெக் செபி ஸ்மார்ட் இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு மேலாண்மை மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தினார்.

பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பத்திர சந்தையின் கட்டமைப்பு, நடைமுறைகள், அதன் செயல்பாடுகள் மற்றும் பத்திர வர்த்தகம், அதன் ஒழுங்குமுறை பற்றி விளக்கினார். இறுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதிலளித்தார்.