ரத்தினம் கல்லூரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சட்ட சேவை ஆணையம் இணைந்து ‘போதை மருந்து பழக்கவழக்கங்களின் ஆபத்துகள்’ என்ற தலைப்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்.
முக்கிய விருந்தினர்களாக, அத்தியாவசியப் பொருட்கள் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற தலைவர் ராஜலிங்கம், மாவட்ட சட்ட சேவை ஆணைய செயலாளர் மற்றும் உப நீதிபதி ரமேஷ் மற்றும் மூத்த வழக்கறிஞர் மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் உடல், மனநலம் மற்றும் குடும்ப வாழ்க்கையையும் பாதிப்பதோடு, சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கிறது என்பது வலியுறுத்தப்பட்டது.
