இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி மன்றம் இணைந்து தேடல் 2025, புதுமையான படைப்புக்கான விளக்கக்காட்சி போட்டியை நடத்தியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி தயாநிதி, சென்னை ஆற்றல் கிரீன் ரினிவபிள் எனர்ஜி சிஇஓ ஸ்ரீ ராம், நீலகிரி டைலேகா இன்னோவேஷன்ஸ் சிஇஓ கோபிநாதன் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தயாநிதி பேசுகையில், சமூகத்தின் நல்வாழ்வுக்கான நிலைத்தன்மையை நோக்கிய ஆராய்ச்சி, படைப்புகளை தமிழ் மொழியில் வழங்கும் பொழுது மக்களிடையே சிறந்த புரிதல் ஏற்படும் எனப் பேசினார்.
ஸ்ரீராம் பேசுகையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான தரவுகள், அது குறித்த புரிதல், ஆராய்ச்சி மட்டுமே சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும் எனக் கூறினார். இதில், சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்துஸ்தான் கல்விக் குழும தாளாளர் சரஸ்வதி, இணை செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் மகுடீஸ்வரன் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் படைப்புகளை பாராட்டினர்.