வரும் ஜுன் 2 பள்ளிகள் திறக்கப்படுவதைத் தொடர்ந்து பின்பற்றபட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 எண்ணிக்கையிலான மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகள் வரும் ஜீன் 2-ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளான பள்ளி தூய்மைப்பணிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை, கல்வி சார் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.