கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் சுப்பா ராவ் ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம் போத்தனூர் இருப்பு பாதை காவல் நிலையம் (போத்தனூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்) சார்பில் போத்தனூர் ரயில் நிலையத்திற்குள் பெண் போலீசாருக்கு தங்கும் அறையும் கழிப்பிட வசதியும், பெண் கைதிகளுக்கான தனி அறையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை போத்தனூர் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ரூவாந்திக்கா தெற்கு ரயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ்விடம் சமர்ப்பித்தார். இந்த மனுவை பெற்ற அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.