கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது.

4b 5 scaled

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி அக். 31 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

4c 3 scaled

கண்காட்சியில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தசாவதாரம், விநாயகர், அத்தி வரதர், தர்பார், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், கிரிவலம், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, எலி நடனம், வளைகாப்பு, தாயக் கட்டை, உழவர் சந்தை, ஜல்லிக்கட்டு, வெட்டிவேர் விநாயகர், தஞ்சாவூர் உருட்டு பொம்மை, மரப்பாச்சி பொம்மைகள் மற்றும் சமையல் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய கைவினைப் பொருட்களுடன், ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரியின் மரப்பொருட்கள், சன்னப்பட்டணா மற்றும் எட்டிக்கோப்பாக்கா மரப்பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.

ஆண்டாள் தாயம், இராமாயணக் கதை (27 தொகுப்புகள்), ஆதி லெட்சுமி, ஸ்ரீ ராஜ மாதங்கி, மேல் முருகன், ஸ்ரீ வீரமாகாளியம்மன், 60-ஆம் கல்யாணம், பஞ்சாயத்து, கிரகப்பிரவேசம், சுரைக்காய் குடுவை, மதுரை தெப்பக்குளம், குருவாயூர் கோயில் மற்றும் முருகன் தங்கத் தேர் போன்ற சிறப்பு ஃபோம் மற்றும் மர பொம்மைகளின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன.

பண்டிகைக் காலச் சலுகையாக அனைத்துக் கொலு பொம்மைகளுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகளுக்குக் கூடுதல் சேவைக்கட்டணம் எதுவுமின்றி பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மூலம் ரூ.75 லட்சம் மதிப்பிலான விற்பனையை பூம்புகார் நிறுவனம் இலக்காக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.