கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 7 பட்டதாரிகளுக்கு தங்க பதக்கமும், 7 பட்டதாரிகளுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டன.

விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக யுபிஎஸ் இந்தியா டெக்னாலஜி சென்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முருகையா, கல்லூரி முதல்வர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.