ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், இக்கல்லூரியின் மகளிர் கபடி அணியினர் மூன்றாம் இடத்தை பெற்றனர். மாணவிகள் அரதி, தர்ஷினி ஆகியோர் சென்னையில் நடைபெறும் தென் மண்டல இடைநிலைப் பல்கலைக்கழகப் கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் மாணவர் பிளெஸன் வெள்ளி பதக்கமும், ஜீவானந்தன் வெண்கல பதக்கமும், சதீஷ் குமார் வெண்கல பதக்கமும் பெற்றனர். ஜூடோ போட்டியில் கவியரசன், கவியா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். தென்மேற்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஜூடோ போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை முதல்வர் பாலசுப்ரமணியன், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.

