கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, உலகத் திருக்குறள் மையத்துடன் இணைந்து ஜனவரி 25 அன்று திருக்குறள் காட்டும் அறிவியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில் உலக சாதனை மாநாடு நடத்தியது. இதில் உலகளாவிய அளவில் ஒரே நாளில், 100 தலைப்புகளில், 100 இடங்களில், 100 மாநாடுகள் நடத்தப்பட்டு, 100 மலர்கள் வெளியிடப்பட்டன.

மாநாட்டில் 32 தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கட்டுரைகள் வழங்கினர். ஆய்வுக்கோவையை கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி வெளியிட, சிறப்பு விருந்தினர் கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் குருஞானம்பிகா பெற்றுக்கொண்டார்.

லண்டன் உலக சாதனை புத்தகம் இணையத்தில் இணைந்து இருக்க, அவர்கள் முன் கட்டுரையாளர்கள்  கட்டுரைகளை  வாசித்தனர். உலகத் திருக்குறள் மையத்தின் சார்பாக கட்டுரை வழங்கிய அனைத்து கட்டுரையாளர்களுக்கும் திருக்குறள் உலக நூல் ஆய்வு மாமணி விருதும், உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் மூதறிஞர் குழுவில் இடம்பெற வாய்ப்பும் வழங்கப்பட்டது.

மாநாட்டின் பொறுப்பாளர்களாகிய ராஜலட்சுமி, ராஜா இருவருக்கும் திருக்குறள் உலகச் சாதனை தகைசால் ஆளுமை விருதும், சிறப்பான புதிய ஆய்வு முடிவு தந்த ராஜாவுக்கு தகைசால் தமிழர் விருதும் வழங்கப்பட்டன.  இந்த மாநாட்டுக்கு லண்டன் உலக சாதனை புத்தகம், உலக சாதனை விருது வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரே நாளில், 1330 தலைப்புகளில், 1330 இடங்களில், 1330 மாநாடுகள், 1330 மலர்கள், திருக்குறள் உலக நூல் என்னும் பொருண்மையில் அமையவுள்ள கின்னஸ் உலக சாதனை நிகழ்விற்கும்  கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, உலகத் திருக்குறள் மையத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது.