ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி நிவேதா 589 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஐஸ்வர்யா 558 மதிப்பெண் பெற்று 2ம் இடமும், ஜனனி 585 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு எஸ்.என்.ஆர். நிர்வாக அறங்காவலர் சுந்தர் பொன்னாடை அணிவித்து, ஊக்கப் பரிசு தொகையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்களும், கணினி பயன்பாடு பாடப்பிரிவில் 5 மாணவர்களும், கணித பாடப்பிரிவில் 2 மாணவர்களும், வணிகவியல் பாட பிரிவில் 1 மாணவரும் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்தம் 13 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.