கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஜூன் 10) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை  மேயரிடம் அளித்து பயன்பெறலாம்.

மேலும், இக்கோரிக்கை மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.