இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) பணக்கொள்கை குழு சமீபத்தில் கூடியது இதன் பின்னர் ஆர்.பி.ஐ.யின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், பாலிமரை (பிளாஸ்டிக் போன்ற பொருள்) கொண்டு ரூபாய் தாள்களை உருவாக்கலாம் என்ற முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

இதன் சாதகம், பாதகம் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் இது ஆரம்ப நிலையில் தான் உள்ளது, இது தொடர்பாக என்பதை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜூன் 30, 2026 முதல் காகித தாள்களை மாற்றி, பிளாஸ்டிக் தாள்கள் புழக்கத்தில் வரும்படி ஆர்.பி.ஐ., நடவடிக்கை எடுக்கப்போவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

இது முற்றிலும் பொய்யான தகவல் என இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரபூர்வ செய்தித்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தொடர்பான எந்த ஒரு தகவல் வந்தாலும் அதை http://rbi.org.in எனும் இணையதளத்தை கொண்டு சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளது.