கங்கா நர்சிங் கல்லூரியில் தேசிய அளவிலான செவிலியர் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து செவிலியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதார நிபுணர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கங்கா மருத்துவமனை மற்றும் கங்கா நர்சிங் கல்லூரியின் நிர்வாக இயக்குநரும், இணை நிறுவுநருமான கனகவல்லி சண்முகநாதன், கங்கா மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகரன், கங்கா நர்சிங் கல்லூரி அறங்காவலர்கள் நிர்மலா ராஜசபாபதி மற்றும் ரமா ராஜசேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மாநாடு நடைபெற்றது.
தலைமை விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் பதிவாளர் சங்கர் சண்முகம் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசுகையில்: சிக்கலான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலப்பு ஆராய்ச்சி முறையின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மருத்துவ நடைமுறைகள் மற்றும் கொள்கை வடிவமைப்புகளுக்கு பயனுள்ள ஆதாரங்களை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் புதுமையான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
