வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில், தூர்வாரப்பட்ட சங்கனூர் கால்வாயினை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தூர்வாரும்போது கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட குப்பைகள், மண் மற்றும் இதர கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உக்கடம் புல்லுக்காடு பகுதியில், குடியிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக, நேரில் பார்வையிட்டார். வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள குடிநீர் ஏடிஎம்-ஐ நேரில் பார்வையிட்டு, அங்கு ஏற்பட்டுள்ள பழுதுகளை விரைவாக சரிசெய்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
