டாக்டர்.என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள தி என்.ஜி.பி பள்ளி, 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
10ம் வகுப்பு தேர்வில் அமோகா சிவகுமார் 493 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், சரஞ்சித் ஜெகதீஸ்வரன் 491 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், பவிஷ்யா, திதிக்ஷா, தன்யஸ்ரீ சுகன்யா பாலசுப்ரமணியன் ஆகியோர் 486 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வில் நிதின் கிருஷ்ணா 491 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், நந்தா கிஷோர் சிவகுமார் 490 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், ஸ்ரீராம் அமிர்தராஜ் 487 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும், அபிஷேக் கருப்புசாமி 485 மதிப்பெண் பெற்று 4ம் இடத்தையும், சுகேஷ் ராமலிங்கம் கதிரேசன் 479 மதிப்பெண் பெற்று 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.