நேரு இன்டர்நேஷனல் பள்ளியின் 2026 – 2027ம் ஆண்டிற்கான மாணவர் தலைவர்கள் குழு பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் குழு பதவியேற்றனர்.

சிறப்பு விருந்தினராகப் மத்திய ரிசர்வ் காவல் படை- ஆர்எஎஃப் துணைத் தளபதி சீனிவாசன் பங்கேற்றார். நிகழ்வில் நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், கல்வி மற்றும் நிர்வாகப் பிரிவு செயல் இயக்குநர் நாகராஜா, பள்ளியின் முதல்வர் சிவப்பிரகாஷ், நேரு இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் நேரு கிட்ஸ் அகாடமியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், சிங்கப் பெண் குழுவின் ஆய்வாளர் பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
