ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டியானது இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் மற்றும் ஐபிஎம் நிறுவன இந்திய மேலாளர் ஜெகதிஷா பட் ஆகியோர்  போட்டியினைத் தொடங்கி வைத்தனர்.

நிறைவு விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகளில் 37 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்தனர். இவர்களுள் தகுதி வாய்ந்த 77 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கிழக்கு மண்டலப் பிரிவில் முதல் பரிசினை ஒடிசா, ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகமும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை ஜார்கண்ட், ஆர்கா ஜெயின் பல்கலைக்கழகமும், நான்காம் பரிசினை மேற்கு வங்காளம், பிரைன்வேர் பல்கலைக்கழகமும், ஐந்தாம் பரிசினை ராஞ்சி, சரளா பிா்லா பல்கலைக்கழகமும் பெற்றன.

வெற்றி பெற்ற கல்வி நிறுவனங்களைச் சார்ந்த போட்டியாளர்களுக்குச்  சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன.