நவராத்திரி விழாவை முன்னிட்டுத் பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்களை ஒன்றிணைக்கும் ‘சங்கல்பம்’ பண்பாட்டுக் கண்காட்சி கோவை லக்ஷ்மி மில்ஸ் நகர்ப்புற மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று நடக்கும் இந்த கண்காட்சிக்கும் அனுமதி இலவசம்.

கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோரின் பங்களிப்பில் இக்கண்காட்சி கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய பாரம்பரிய சடங்குகள், மலர்க் கலைகள், கைத்தறி நெசவு, பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் ‘இகெபானா’ பாணியில் புதுமையான கொலு மற்றும் இந்தியா முழுவதும் சுமார் 21 தேவி சிலைகள் குழு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இக்கண்காட்சி குறித்து ஏற்பாட்டாளர் விஜயலட்சுமி ருத்ரப்பன் கூறுகையில்: நமது முன்னோர்களின் மாபெரும் கட்டிடக் கலை மற்றும் பாரம்பரியக் கொலு பொம்மை செய்யும் கைவினைஞர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் குறைந்து வருகிறது. வருமானக் குறைவு காரணமாக அடுத்த தலைமுறையினர் வேறு தொழில்களுக்குச் சென்று விடுகின்றனர். என்றார்.
