2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளால் மும்பையின் தாஜ் ஹோட்டல் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், 166 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு, மோப்ப நாய்களின் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் முழுமையான ஆய்வை நடத்தியது.
குறிப்பாக, ரயில் நடைமேடைகளில் இருந்த பயணிகளின் உடைமைகள், பார்சல் அலுவலகம் மற்றும் ரயில் தண்டவாளப் பகுதிகள் ஆகியவற்றில் மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுகிறார்களா என்பதைக் கண்டறிந்து கண்காணிக்க, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
