எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது, தவெக அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டதால் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கோவையிலும் போராட்டங்கள் நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில்
தொண்டாமுத்தூர், கரும்புக்கடை, பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 15 இடங்களில் தவெக அரசு, காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
