மகாத்மா காந்தி பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ  கனிமொழி, மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் உருவப்படங்கள், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைக்குச்சி, செவித்திறன் கருவி, சக்கர உதவியுடன் நடப்பதற்கான ரோல்லடோர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.