கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆசிய போட்டியில் தங்கம் வென்று, இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு அளித்த ஆதரவால் இந்த நிலையை அடைந்துள்ளேன்.

14 a scaled

கடந்த போட்டியைவிட இந்தப் போட்டியில் கடுமையாக உழைத்தேன். 2023ஆம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டேன். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாக இருந்தது.

ஒலிம்பிக் வாய்ப்பு குறித்து பேசிய அவர், இந்தியா இன்னும் உலக அளவில் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கிறது. தற்போதைய சாதனை தனக்கு முழுமையான நிறைவை அளிக்கவில்லை.

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளிக்கிறார்.இளம் விளையாட்டு வீரர்கள் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது.   விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து முதலமைச்சரிடமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கும்போது பயிற்சியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார்.