கோவை மண்டலத்திலுள்ள ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா பை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம், ஸ்ரீ பால முருகன் விற்பனை நிலையம் மற்றும் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் லிமிடெட் ஆகியவற்றில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி சனிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், கைத்தறி இரகங்களின் விற்பனை நிலவரம் மற்றும் விற்பனை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து, விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்தல், சிறப்புத் தள்ளுபடி மற்றும் விற்பனைத் திட்டங்களை முறையாக செயல்படுத்துதல், கைத்தறி இரகங்களின் தரம் மற்றும் வடிவமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதேபோல கோவை மண்டலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 2026 – 2027-ம் ஆண்டிற்கான விற்பனை குறியீடு ரூ. 28 கோடி மற்றும் தீபாவளி 2026 விற்பனைக் குறியீடு ரூ.10 கோடிகளை எய்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதன் பின்னர், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் துணிகள் வாங்கிய அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அம்சமணி கைத்தறி துறை அமைச்சர் அவர்களிடமிருந்து விற்பனையை பெற்றுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது செந்தில்குமார், உதவி இயக்குநர் கைத்தறித் துறை, கோயமுத்தூர், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் ப.அம்சவேணி, மேலாளர் (வ & உ) சி.அய்யப்பன், துணை மண்டல மேலாளர், சு.லட்சுமி பிரபா, விற்பனை நிலைய மேலாளர்கள் விஜயானந்த், க.செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.