தைப்பூசத்தை முன்னிட்டு கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, உற்சவர் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பின்னர், திருத்தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனன்யாஸ் நானா நானி நிர்வாக இயக்குநர் யுவராஜ், இணை நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.