டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சர்வதேச வணிகவியல் துறை சார்பில் கடல்சார் கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

டெர்ன்மேக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சரவண குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஸ்காண்டா பிரைட் சர்வீசஸ் பணியாற்றும் அஷ்வின் ராஜேந்திரன், மாணவர்களுடன் தனது தொழில்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.  கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்திய கடல் துறைமுகங்கள், உலக கடல் துறைமுகங்கள், கப்பல் இடைத்தரகர்கள், கடல் வழித்தடங்கள் மற்றும் நீரிணைகள், கடல்சார் ஒப்பந்தங்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் கொள்கலன்கள் உள்ளிட்ட ஏழு முக்கிய கடல்சார் தலைப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

கடல்சார் எக்ஸ்போவில் இதில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கடல்சார் தொழில்துறை தொடர்பான மாதிரிகள் மற்றும் காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்களும் இதனை பார்வையிட்டனர்.