கோவை அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் முதல்வர் ஸ்ரீ வித்யாசங்கர் விழாவைத் துவக்கிவைத்து, ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் மற்றும் இந்த திருநாளைக் கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள நோக்கம், முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
பள்ளியின் ஆலோசகர் கணேசன், மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களைப் பற்றியும், அதில் கிருஷ்ண அவதாரத்தின் மகிமை, போதனைகள் பற்றியும் பேசினார். தொடர்ந்து பஜன் பாடல்கள், கலைநிகழ்ச்சிகள், உறியடித்தல் போட்டி நடைபெற்றன.
